பாராளுமன்றத்தில் தனக்கு வழங்கப்படும் சம்பளம் தொடர்பான பற்றுசீட்டை வெளியிட்டார் அர்ச்சுனா

பாராளுமன்றத்தில் தனக்கு வழங்கப்படும் சம்பளம் தொடர்பான பற்றுசீட்டை வெளியிட்டார் அர்ச்சுனா

பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, 2026 மார்ச் மாதத்திற்கான தனது பாராளுமன்ற சம்பள பற்றுசீட்டை முகநூலில் பதிவிட்டுள்ளார்

அவர் பகிர்ந்த ஆவணத்தின் படி, மாதாந்திர மொத்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் ரூ. 415,169.93 ஆகும்.

இதிலிருந்து வரி உள்ளிட்ட கழிவுகள் ரூ. 19,308.71 கழிக்கப்பட்ட பின்னர், அவரது கணக்கில் ரூ. 395,861.22 நிகரமாக வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பள விவரத்தில்,

மாதாந்திர கொடுப்பனவு – ரூ. 54,285
தொலைபேசி கொடுப்பனவு – ரூ. 50,000
போக்குவரத்து கொடுப்பனவு – ரூ. 15,000
அலுவலக கொடுப்பனவு – ரூ. 100,000
எரிபொருள் கொடுப்பனவு – ரூ. 179,707.93
அமர்வு கொடுப்பனவு – ரூ. 15,000
உள்ளிட்ட பல தொகைகள் அடங்குகின்றன.

மேலும், வருமானவரி, வீட்டு வாடகை, மின்சாரம், நீர் கட்டணம் உள்ளிட்ட செலவுகளும் கழிவுகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த ஆவணத்தை வெளியிட்ட அவர், அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இதேபோன்ற சம்பளத்தைப் பெறுகின்றனர் என்றும், பொதுமக்கள் இதுபற்றி தெளிவாக அறிந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியல்வாதிகளை விமர்சிப்பதற்கு முன் இந்த விவரங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், வருமானத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )