பண்டிகை கால உணவு விலை உயர்வு

பண்டிகை கால உணவு விலை உயர்வு

பண்டிகை கால உணவு வகைகளுக்கான விலைகள் இன்று (08) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உற்சவ மண்டபங்கள் மற்றும் உணவு வழங்குநர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் தலைவர் அகில ஜயரத்ன கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போது, மே மாதம் முதல் மேற்கொள்ளப்படும் புதிய முன்பதிவுகளுக்கு கட்டணங்கள் 15% முதல் 20% வரை அதிகரிக்கப்படலாம் என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் மதிப்புக்கூட்டு வரி (VAT) அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகும்.

இருப்பினும், சங்கத்துக்கு அரசாங்கத்திடமிருந்து முறையான தீர்வு அல்லது நிவாரணம் கிடைத்தால், கட்டண உயர்வை மீண்டும் குறைக்கக்கூடும் என சங்கம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )