
முட்டைகளைக் கழுவிய பின் சேமித்து வைக்க வேண்டாம்எச்சரிக்கை அறிவிப்பு
முட்டைகளைக் கழுவிய பின்னர் சேமித்து வைக்கும் போது முட்டையின் மேற்பரப்பில் உள்ள கிருமிகள் , அதன் ஓட்டில் உள்ள மிகச்சிறிய துளைகள் ஊடாக முட்டைகளுக்குள் செல்லும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் புலின ரணசிங்க சுட்டிக்காட்டுகிறார்.
“முட்டையின் ஓடு மிகவும் நுண்ணிய துளைகளைக் கொண்டுள்ளது. எனவே, முட்டைகளைக் கழுவும்போது, மேற்பரப்பில் உள்ள அழுக்கு, தூசி மற்றும் விலங்குகளின் மலம் தண்ணீரில் கரைந்து முட்டையின் உள்ளே நகரும்.
முட்டையின் உள்ளே புரதம் நிறைந்துள்ளது .
நுண்ணுயிரிகள் உள்ளே செல்லும் போது அவை விரைவாக வளர்ந்து முட்டை நச்சுத்தனமையானதாகின்றது .
எனவே முட்டைகளைக் கழுவிய பின் சேமிக்க கூடாது எனவும் அவற்றை
பயன்படுத்துவதற்கு முன்னர் கழுவினால் போதுமானது எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் புலின ரணசிங்க சுட்டிக்காட்டுகிறார்.
பெரும்பாலும் கழுவப்பட்ட முட்டைகள் சந்தையில் பேக் செய்யப்படுவதில்லை என நினைக்கிறேன் மாறாக அவை இயந்திர செயல்பாட்டின் மூலம் நீரை பாவிக்காது சுத்தம்செய்யப்படுகின்றன எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் புலின ரணசிங்க சுட்டிக்காட்டுகிறார்.

