சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 23 மீனவர்கள் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 23 மீனவர்கள் கைது

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள், டைவிங் உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 23 நபர்களையும் 5 டிங்கிகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

ஜூலை 23 முதல் 31 வரை நாட்டின் கடல் எல்லைகளை உள்ளடக்கிய வகையில் சட்டவிரோத மீன்பிடி தொடர்பில் கடற்படை, போலீசார் மற்றும் மீன்வள மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகள் குழு மேற்கொண்டன.

இந்த சோதனைகளின் போது விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்ட 210 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டார்.

இந்த நடவடிக்கைகள் திருகோணமலையில் உள்ள கோட்பே, கும்புருப்பிட்டி, கிண்ணியா, மூதூர் மற்றும் மன்னாரில் உள்ள காகரத்தீவு ஆகிய கடற்கரைகள் மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கிய வகையில் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )