கேகாலை – அவிசாவளை வீதியில் பேருந்து கவிழ்ந்து விபத்து

கேகாலை – அவிசாவளை வீதியில் பேருந்து கவிழ்ந்து விபத்து

கேகாலை – அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட, தெம்பிலியான பகுதியில் பேருந்து விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தானது இன்று (02) அதிகாலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது பேருந்தில் 37 பேர் பயணித்துள்ள நிலையில், காயமடைந்த 23 பேர் சிகிச்சைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெரணியகலையில் இருந்து அவிசாவளை கைத்தொழில் பேட்டைக்கு பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து தெஹியோவிட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )