ருத்ராட்சம் அணிவதால் கிடைக்கும் பலன்கள்

ருத்ராட்சம் அணிவதால் கிடைக்கும் பலன்கள்

சிவன் அருள் இருந்தால்தான், சிவ சின்னமாக விளங்கும் ருத்ராட்சத்தைக்கூட அணிய முடியும் என்கிறார்கள். ருத்ராட்சம் அணிவது பற்றி, ஸ்ரீமத் தேவி பாகவதம், சிவ மகா புராணம் போன்றவை சில விஷயங்களை சொல்கின்றன.

* எவ்வித மந்திரங்களை உச்சரிக்காதவனும், எவ்வித யாகங்களைச் செய்யாதவரும்கூட ருத்ராட்ச மணிகளை வெறுமனே தொடுவதன் மூலம் தன் பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுபடுவார்.

* ருத்ராட்சத்தை அணிபவரும், வழிபடுபவரும், பந்த பாசங்களில் இருந்து விடுபட்டு, தொடர இருக்கும் அனேக கோடி பிறப்புகளில் இருந்து விடுபடுகிறார்.

* ருத்ராட்சம் அணிந்த ஒருவருக்கு உணவும், உடையும் தருபவரும், ருத்ராட்சம் அணிந்த சிவனடியார்களின் பாதங்களை கழுவி பூஜிப்பவரும், அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுபட்டு சிவலோகத்தை அடைகிறார்.

* நம்பிக்கையோடும், நம்பிக்கையில்லாமலும் ருத்ராட்சத்தை அணிந்து கொள்பவர் ருத்ர அம்சத்தைப் பெறுகிறார்.

* ருத்ராட்சத்தின் மகிமையை என்னாலும் விளக்கிக் கூற முடியாது என்று சிவபெருமான் தேவிக்கு உரைத்ததாக ஸ்ரீமத் தேவிபாகவதம் கூறுகிறது.

* அனைத்துவித ஸ்தோத்திரங்களை உச்சரிப்பதன் மூலமும், விரதங்களை அனுசரிப்பதன் மூலமும் அடைகின்ற பலனை, ஒருவன் ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதன் மூலம் பெறுவான்.

* ருத்ராட்ச மாலையை அணிந்தவருக்கு ஒருவன் உணவு அளிப்பானாகில், அவனது 21 தலைமுறை மக்களும் பாவங்களிலிருந்து விடுபட்டு ருத்ரலோகத்தை அடைவார்கள்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )