வைத்தியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு

வைத்தியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு

வைத்தியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் டொக்டர் ஹன்சமல் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

வைத்தியர்களின் இடமாற்றங்களை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்படவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சு தலையிட்டு ,11 ஆம் திகதி காலை 8 மணிக்குள் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால், நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் கூறினார்.

வைத்தியர்களின் இடமாற்றப் பட்டியல் பிரச்சினைகளில் சுகாதார அமைச்சு முறையாகத் தலையிட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்காவிட்டால் , அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு என்ற வகையில் நாம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணக் கோரி, நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

சுகாதார சுகாதார அமைச்சுடன் நாங்கள் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் அதிகாரிகள் கண்மூடித்தனமாக இருக்கிறார்கள்.

தாவது காரணத்தை சொல்லி எதிர்வரும் 11 ஆம் திகதி காலை 8 மணிக்குள் சுகாதார அமைச்சு தீர்வு வழங்காவிட்டால் , நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.” என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் டொக்டர் ஹன்சமல் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )