அரசாங்கம் எம்மை பழிவாங்குகிறது என்கிறார் மஹிந்த ராஜபக்ஷ

அரசாங்கம் எம்மை பழிவாங்குகிறது என்கிறார் மஹிந்த ராஜபக்ஷ

பழிவாங்கும் நோக்கத்துடன் தற்போதைய அரசாங்கம் ,முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்குவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று பிற்பகல் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

“மக்கள் எங்களுக்கு வழங்கிய சலுகைகளை விட எங்களுக்கு எதுவும் பெரிதில்லை . அது இருக்கும் வரை, எந்த சலுகை நீக்கப்பட்டாலும் அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.”

கேள்வி – ”அவ்வாறு சலுகை நீக்கப்படுமானால் நீங்கள் விஜேராமவை விட்டு வெளியேறி மெதமுலனவிற்கு செல்ல வேண்டுமா”?

பதில் – ” விஜேராமவை விட மெதமுலன மிகவும் சிறந்த இடம் .”

கேள்வி – ” அரசாங்கம் என்ன நோக்கத்திற்காக இவ்வாறு செய்கிறது என நினைக்கிறீர்கள்” ?

பதில் – “பழிவாங்குவதற்காக “

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )