
12 கிலோ குஷ் போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் மூவர் கைது
12 கிலோ 160 கிராம் குஷ் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் மூவர் கட்டுநாயக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை விமான நிலைய வருகை முனையத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் சந்தேக நபர்களை கைது செய்தனர்.
சந்தேக நபர்கள் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து மலேசிய விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மூவரும் இந்தியர்கள் எனவும் ,ஆண் சந்தேக நபர் 42 வயதுடையவர் எனவும் , பெண் சந்தேக நபர்கள் இருவரும் 22 மற்றும் 43 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இலங்கைக்கு போதைப்பொருட்களை கொண்டுவந்தமை , போதைப்பொருட்களை வைத்திருத்தல் மற்றும் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் சந்தேக நபர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

