பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் ஹைதர் அலி கைது

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் ஹைதர் அலி கைது

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் ஹைதர் அலி கைது செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தொடர்பில் மான்செஸ்டர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது கடந்த ஜூலை 23 ஆம் திகதி மான்செஸ்டரில் நடந்தாக கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

24 வயதான ஹைதர் அலி தொடர்பான குற்றவியல் விசாரணை குறித்து தங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஜூலை 17 முதல் ஓகஸ்ட் 6 வரை நடைபெற்ற பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கூறியுள்ளது.

பெக்கன்ஹாம் மைதானத்தில் ஷாஹீன்ஸ் அணி விளையாடிக் கொண்டிருந்தபோது ஹைதர் அலி கைது செய்யப்பட்டதாகவும், அவரது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டு, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஹைதர் அலிக்கு சட்ட ஆதரவு வழங்குவதாகவும், இங்கிலாந்து சட்ட நடைமுறைகளை முழுமையாக மதிப்பதாகவும் பாக்கிஸ்தான் கிரிக்கட் சபை (PCB) தெரிவித்துள்ளது.

இதனால், விசாரணை முடியும் வரை ஹைதர் அலியை தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

விசாரணை நிறைவடைந்து அனைத்து உண்மைகளும் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, தனது நடத்தை விதிகளின் கீழ் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் உரிமையை தாம் கொண்டுள்ளது என PCB அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )