ஈஸி கேஷ் முறையில் களுத்துறையில் ஹெராயின்விற்பனை செய்த சந்தேக நபர் 1.5 மில்லியன் பெறுமதியான ஹெராயினுடன் கைது

ஈஸி கேஷ் முறையில் களுத்துறையில் ஹெராயின்விற்பனை செய்த சந்தேக நபர் 1.5 மில்லியன் பெறுமதியான ஹெராயினுடன் கைது

ஈஸி கேஷ் முறையில் களுத்துறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஹெராயின் விற்பனை செயது வருவதாக கூறப்படும் பாரிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் உதவியாளர் ஒருவர் சுமார் 1.5 மில்லியன் மதிப்புள்ள ஹெராயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் , துபாயில் தலைமறைவாகியிருந்து கொண்டு ஈஸி கேஷ் முறையில் களுத்துறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஹெராயின் கடத்தி வரும் பாரிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் உதவியாளர் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகளின் புலனாய்வு அதிகாரிகளின் ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

களுத்துறை, மத்துகம, பாணந்துறை, பயாகல, பேருவளை, மத்துகம உள்ளிட்ட பல பகுதிகளுக்கு ஈஸி கேஷ் முறையைப் பயன்படுத்தி இந்த நபர் ஹெராயின் விநியோகித்து வந்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

களுத்துறை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் பயணித்த முச்சக்கர வண்டி மற்றும் பயன்படுத்திய மொபைல் போனையும் களுத்துறை குற்றப்பிரிவு கைப்பற்றியது.

சந்தேக நபர் இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதாகவும் விசாரணைகளுக்காக தடுப்புக்காவல் உத்தரவு பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )