
”என்ன பதில் எழுதினீர்கள் என கேட்க வேண்டாம்” ” தவறான பதிலுக்கு திட்ட வேண்டாம்” புலமைப்பரிசில் பரீட்சைக்குப் பிறகு பரீட்சை ஆணையர் நாயகம் பெற்றோரிடம் அன்பு கோரிக்கை
இன்று நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்குப் பிறகு, மாணவர்கள் வினாத்தாளுக்கு பதிலளித்த விதம் குறித்து பெற்றோர்கள் கேள்வி கேட்பதைத் தவிர்க்குமாறு பரீட்சை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி பெற்றோரை கேட்டுக்கொண்டுள்ளார்.
மாணவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தை கழிக்க வாய்ப்பளிக்குமாறும், புலமைப்பரிசில் பரீட்சையின் அடிப்படையில் அவர்களைது குழந்தைப் பருவத்தை குழப்ப வேண்டாம் என்றும் பெற்றோரிடம் கேட்டுக்கொண்டார்.
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதும் 2,787 பரீட்சை மத்திய நிலையங்களில் இன்று காலை 9:30 முதல் மதியம் 12:15 வரை நடைபெற்றது .
307,951 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினர்.
மேலும், இந்த ஆண்டு விசேட தேவையுடைய 901 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியாதாகவும் அவர்களில் 12 பேர் பிரெய்லி முறையில் பரீட்சை எழுதியதாகவும் என்று பரீட்சை ஆணையர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார்.
” இந்த சிறு குழந்தைகள் தங்கள் குழந்தைப் பருவத்தை மகிழ்ச்சியாகக் கழிக்க ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும். 05 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வின் காரணமாக குழந்தைகள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் தடுப்பது நம் அனைவரின் பொறுப்பாகும். குழந்தைகள் தங்கள் திறன்களுக்கு ஏற்ப தேர்வு எழுதுகிறார்கள். குழந்தைகளின் திறன்கள் வேறுபட்டவை, எனவே குழந்தைகளை ஒப்பிட்டுப் பார்த்தல், இன்று குழந்தைகள் தேர்வில் என்ன எழுதினார்கள் என கேள்வி கேட்டல் போன்றவற்றை தவித்திடுங்கள் ,அவர்கள் தவறான பதில் எழுதினால், திட்டவோ தண்டிக்கவோ வேண்டாம்.
அவர்கள் சரியான பதில் எழுதினாலும் சரி, தவறான பதில் எழுதினாலும் சரி, அந்த நேரத்தில் குழந்தைகள் வினாத்தாளை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதைக் பொறுத்து அது அமையும். எனவே, நம் குழந்தைகள் எப்படி பதிலளித்தாலும் சரி, குழந்தைப் பருவத்தை நாம் திரும்பப் பெற முடியாது. எனவே, இந்த குழந்தைப் பருவத்தை பதில்களை எழுதுவதை அடிப்படையாகக் கொள்ளாதீர்கள். புலமைப்பரிசில் என்பது குழந்தைக்கு ஒரே ஒரு தேர்வு. இந்த குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்த தேர்வுகளை எதிர்கொள்ளும் திறனைக் கொண்டுள்ளனர். எனவே, இந்த புலமைப்பரிசில் தேர்வின் காரணமாக குழந்தைகள் மீது அழுத்தம் கொடுக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என்று பெற்றோரை நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.”
என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி பெற்றோரை கேட்டுக்கொண்டுள்ளார்.

