கடலில் மூழ்கி வெளிநாட்டு பெண் உயிரிழப்பு

கடலில் மூழ்கி வெளிநாட்டு பெண் உயிரிழப்பு

அளுத்கம – மொரகல்ல கடற்கரையில் இன்று (11) நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

குறித்த பெண் இன்னொரு குழுவினருடன் சேர்ந்து மொரகல்ல கடற்கரையில் நீராடியபோது அலையில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

48 வயதான வியட்நாமைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

குறித்த பெண்ணின் உடல் பெந்தர கடற்கரையில் கரையொதுங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )