வேறு எந்த நாடும் செய்ய முடியாததை அமெரிக்கா செய்துள்ளது

வேறு எந்த நாடும் செய்ய முடியாததை அமெரிக்கா செய்துள்ளது

ஈரானின் மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் “வாழ்த்துக்கள், ஜனாதிபதி டிரம்ப். அமெரிக்காவின் வலிமையால் ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைக்கும் உங்கள் துணிச்சலான முடிவு வரலாற்றை மாற்றும்.

டிரம்ப் தலைமை “மத்திய கிழக்கு மற்றும் அதற்கு அப்பால் செழிப்பு மற்றும் அமைதியான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் வரலாற்றின் ஒரு மையப்புள்ளியை உருவாக்கியுள்ளது. தாக்குதல் முடிந்தவுடன் ஜனாதிபதி டிரம்பிடம் இருந்து எனக்கு உடனடியாக அழைப்பு வந்தது.

ஆபரேஷன் ரைசிங் லயன், இஸ்ரேல் உண்மையிலேயே அற்புதமான காரியங்களைச் செய்துள்ளது. ஆனால் ஈரானின் அணுசக்தி வசதிகளுக்கு எதிரான இன்றைய நடவடிக்கையில், அமெரிக்கா உண்மையிலேயே நிகரற்றதாக இருந்துள்ளது. பூமியில் வேறு எந்த நாடும் செய்ய முடியாததை அது செய்துள்ளது,” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )