
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று தீப்பிடித்தது
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிபென்ன மற்றும் தொடங்கொட சந்திக்கு அருகில் பஸ் ஒன்று தீப்பிடித்தது.
காலிக்கும் மகும்புரவிற்கும் இடையிலான சேவையிலீடுபடும் பஸ் ஒன்று இவ்வாறு தீப்பிடித்தது.
பஸ்ஸில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
போலீசாரும் அப்பகுதி மக்களும் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka

