
சாவகச்சேரியில் திருட்டுச்சம்பவம் தொடர்பில்இரண்டு சந்தேக நபர்கள் கைது
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சங்கத்தானை மடத்தடியில் உள்ள வீட்டில் வெள்ளிக்கிழமை (15) இரவு இடம் பெற்ற திருட்டுச்சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்
வெள்ளிக்கிழமை (15) இரவு வீட்டில் யாரும் இல்லத வேளை வீட்டில் இருந்த தொலைகாட்சி உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்த நிலையில் துரிதகதியில் விசாரணைகளை ஆரம்பித்த சாவகச்சேரி பொலிஸ் நிலைய போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உப பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழுவினர் நேற்று இரவு குடத்தனை பொற்பதி பகுதியில் உள்ள வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த திருடப்பட்ட பொருட்களுடன் அதே பகுதியை சேர்ந்த 24, 28 வயதான இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிரதீபன்

