
கைலகொட வயல்வெளியில் ஆடையின்றி கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம்
பதுளை, கைலகொட முதியோர் இல்லத்திற்கு அருகிலுள்ள வயல்வெளியில் இருந்து இன்று காலை மர்மமான முறையில் உயிரிழந்த ஆணின் சடலம் ஒன்று நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நான்கு நாட்களுக்கு பின்னர் வயலின் உரிமையாளர் வயலுக்குச் சென்றுள்ள நிலையில், குறித்த சடலத்தை பார்த்து பதுளை பொலிஸிற்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த பதுளை பொலிஸ் அதிகாரிகள் சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய பதுளை பொலிஸ் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

