
பிடியாணையை இடைநிறுத்த கோரிய ராஜிதவின் மனு தொடர்பில் நீதிமன்ற உத்தரவு
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, தன்னை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று (18) கொழும்பு தலைமை நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது, முறைப்பாட்டாளரான இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு, மனு தொடர்பாக ஆஜராகும்போது இந்த கோரிக்கையை விடுக்குமாறு நீதவான் தெரிவித்துள்ளார். அதன்படி, குறித்த மனுவில் கோரப்பட்ட விடயங்கள் தொடர்பாக நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.
சமீபத்தில், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

