நல்லூர் அலங்கார கந்தனின் தேர் திருவிழா

நல்லூர் அலங்கார கந்தனின் தேர் திருவிழா

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழாவானது பெருந்திரளான மக்களுக்கு மத்தியில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

காலை 6.15 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து ஆறுமுகபெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் வெளிவீதி உலா வரும் காட்சி இடம்பெற்று வருகின்றது.

நாளைய தினம் (22) காலை தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளதுடன், மாலை கொடியிறக்கம் நடைபெறவுள்ளது.

நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இதன்படி தொடர்ந்து 25 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று சப்பரம், தேர் மற்றும் தீர்த்த திருவிழாக்களுடன் நல்லூர் கந்தனின் உற்சவம் இனிதே நிறைவுறும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )