
விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால்டயானா கமகேவை கைது செய்ய பிடியாணை உத்தரவு
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால், அவரைக் கைது செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கு இன்றுகொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது
இந்த பிடியாணை உதித்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வழக்கின் பிரதிவாதியான டயானா கமகேவின் பிணையாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

