பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு                           வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து
வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது .

இன்று காலை 9.30 முதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

அதன்படி, காலி முதல் மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம்
அறிவுறுத்தியுள்ளது.

சிலாபம் முதல் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலான கடற்கரைப் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 50 – 60 கி.மீ வரை அதிகரிக்கும் மற்றும் கடல் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாக இருக்கும் எனவும்
நீர்கொழும்பு முதல் காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரைப் பகுதிகளில் கடல் அலைகள் 2.5 – 3 மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

இதனால் நீர்கொழும்பு முதல் காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் கடல் அலைகள் 2.5 – 3 மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )