தென் அமெரிக்காவில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

தென் அமெரிக்காவின் தெற்கு முனையையும் அண்டார்டிகாவையும் இணைக்கும் டிரேக் பாசேஜில் இன்று 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 10.8 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும், ஆர்ஜென்டினாவின் உஷுவாயா நகரிலிருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் நிகழ்ந்ததாகவும் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உடனடி பாதிப்புகள் அல்லது உயிரிழப்புகள் குறித்து எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. இருப்பினும்,முன்னெச்சரிக்கையாக சிலியின் மாகல்லனேஸ் பிராந்தியத்தில் உள்ள கடற்கரை பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )