தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட துணை மருத்துவ நிபுணர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட துணை மருத்துவ நிபுணர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்

மேல் மாகாண சபைக்கு உட்பட்ட மருத்துவமனைகளில் துணை மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேல் மாகாண பிரதம செயலாளர் தலைமையில் நேற்று (22) நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்தையடுத்து வேலைநிறுத்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக ஒன்றிணைந்த துணை மருத்துவ நிபுணர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இடமாற்ற உத்தரவுகள் தொடர்பான பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )