
விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி என்பது இந்துக்கள் கொண்டாடும் ஒரு முக்கியமான பண்டிகையாகும். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின் நேரம், வழிபாட்டு முறைகள் ஆகியவை குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் திகதி புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. ஆகஸ்டு 26, 2025 பிற்பகல் 2:22 மணிக்கு சதுர்த்தி திதி தொடங்குகிறது.
இந்த திதி ஆகஸ்ட் 27 2025 பிற்பகல் 3:52 மணிக்கு நிறைவடைகிறது. விநாயகர் பிரதிஷ்டை மற்றும் பூஜை செய்வதற்கான சுபமுகூர்த்தம் ஆகஸ்ட் 27, 2025 காலை 11:06 முதல் பிற்பகல் 1:40 வரை உள்ளது. மாலை வணங்கும் வழக்கம் உள்ளவர்கள் 6 மணிக்கு மேல் பூஜையைத் தொடங்கலாம்.
இந்த சுப நேரத்தில் பூஜை செய்வது மிகவும் விசேஷமானது. விநாயகர் சதுர்த்தி நாளில் விரதம் இருந்து விநாயகரை மனமுருகி வழிபடுபவர்களுக்கு எந்த கஷ்டங்கள் வந்தாலும் அதை விக்னேஸ்வரர் தீர்த்து வைப்பார் என்பது நம்பிக்கை.

