மகுடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

மகுடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

ஈட்டி மற்றும் ஐங்கரன் படங்களை இயக்கிய ரவி அரசு, விஷாலின் 35-வது திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் இசையை ஜி.வி பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார்.

படத்தை ஆர் பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம் தயாரிக்கிறது. இது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99 -வது திரைப்படமாகும்.

இதனை தொடர்ந்து இப்படத்திற்கு ‘மகுடம்’ என தலைப்பு வைத்துள்ளனர். இப்படம் கப்பல் மற்றும் துறைமுகத்தை சார்ந்து உருவாக்கப்பட்ட கதைக்களமாகும்.

இந்த நிலையில், ‘மகுடம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் தெரிவித்து வெளியாகி உள்ள ஃபர்ஸ்ட் லுக்கில் விஷால் 3 விதமான கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பது உறுதியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )