
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து : 11 பேர் காயம்
தங்காலை, நாகுலுகம பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாகுலுகமவில் உள்ள மாவெல்ல சந்திக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறையிலிருந்து தங்காலை நோக்கிச் சென்ற பேருந்தும், தங்காலையிலிருந்து திக்வெல்ல நோக்கிச் சென்ற மற்றொரு பேருந்துமே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக நாகுலுகம மற்றும் தங்காலை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

