
சிம்பாப்வே அணிக்கெதிரான டி20 இலங்கை கிரிக்கெட் குழாம் அறிவிப்பு
சிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் T20 ஓவர் தொடருக்கான குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, நுவனிது பெனாண்டோ, கமிந்து மெண்டிஸ், தசுன் சானக, துனித் வெல்லாலகே, சாமிக்க கருணாரத்ன, மஹிஷ் தீக்ஷன, துஷான் ஹேமந்த, துஷ்மந்த சமீர, பினுர பெனாண்டோ, நுவான் துஷார மற்றும் மதீஷ பத்திரண ஆகியோரும் குழாமில் அடங்கியுள்ளனர்.
இலங்கை அணியின் சிம்பாப்வே சுற்றுப்பயணம் நாளை (29) முதலாவது ஒருநாள் போட்டியுடன் ஆரம்பமாகவுள்ள அதே நேரத்தில் T20 தொடர் செப்டெம்பர் மாதம் 03ஆம் திகதி தொடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது

CATEGORIES Sports News

