
பொத்துவில் கோமாரி பகுதியில் சுற்றுலா பஸ் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி 57 பேர் காயம்
பொத்துவில் கோமாரி பகுதியில் சுற்றுலா பஸ் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 57 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் வெலிமடை பகுதியைச் சேர்ந்த 74 வயதுடையவர் என கூறப்படுகிறது.
காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
கெப்பட்டிபொலவிலிருந்து அருகம்குடாவுக்கு சுற்றுலா சென்ற பஸ்ஸொன்று கோமாரி பகுதியில் உள்ள பாலத்தில் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

