
சமன் ஏக்கநாயக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்முன்னிலையாக அவசியமில்லை
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டிய அவசியமில்லை என குற்றப்புலனாய்வு திணைக்களம் அறிவித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயம் தொடர்பான விசாரணைக்கு அமைய வாக்குமூலம் அளிக்க இன்று காலை 9.00 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு இதற்கு முன்னர் அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

