
வெறிநாய் கடித்து சிறுவன் உயிரிழப்பு
4 வயது சிறுவன் ஒருவனை வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் நோய்த்தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்துள்ள சம்பவம் தெலுங்கானாவில் பதிவாகியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் துங்கூரு கிராமத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் 2 மாதங்களுக்கு முன்பு, வெறிநாய் கடித்துள்ளது. ரேபிஸ் தடுப்பூசி போடாததால் குறித்த சிறுவனின் உடலில் ரேபிஸ் நோய்த்தொற்று படிப்படியாக பரவி, உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளது.
பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
CATEGORIES India

