
மன்செஸ்டர் சிற்றியிலிருந்து விலகிய எடெர்சன்
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியிலிருந்து துருக்கியக் கழகமான பெனர்பாச்சேக்கு சிற்றியின் கோல் காப்பாளர் எடெர்சன் சென்றுள்ளதாக சிற்றி நேற்று (02) அறிவித்துள்ளது.
போர்த்துக்கல் கழகமான பெய்ஃபிக்காவிலிருந்து 2017ஆம் ஆண்டு சிற்றியில் இணைந்த 32 வயதான எடெர்சன் ஆறு பிறீமியர் லீ, சம்பியன்ஸ் லீக் உள்ளடங்கலாக 18 கிண்ணங்களை சிற்றியில் வென்றிருந்தார்.
பெனெர்பாச்சேயானது ஏறத்தாழ 12 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்களுக்கு எடெர்சனைக் கைச்சாத்திட்டதாகக் கூறப்படுகிறது.
CATEGORIES Sports News

