
ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா ?பாராளுமன்றத்தில் வெளிப்படுத்திய பிரதமர் ஹரிணி
இன்று (19) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தகவல்களின்படி, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இந்த விபரங்களை வெளியிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்த கொடுப்பனவுகள்(ரூபாயில்)
மாதாந்த கொடுப்பனவு 54,285
அலுவலகக் கொடுப்பனவு 100,000
தொலைபேசிக் கொடுப்பனவு 50,000
போக்குவரத்துக் கொடுப்பனவு 15,000
சாரதி கொடுப்பனவு 3,500 *
உபசரிப்புக் கொடுப்பனவு 1,000
குறிப்பு: பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சின் ஊடாக ஒரு சாரதியை பெற்றுக்கொண்டால்,
அந்த உறுப்பினருக்கு சாரதி கொடுப்பனவு வழங்கப்பட மாட்டாது.
தினசரி மற்றும் ஏனைய கொடுப்பனவுகள்
நாடாளுமன்ற அமர்வுக்கான கொடுப்பனவு: ஒரு நாளுக்கு ரூ. 2,500.
குழுக்கூட்டக் கொடுப்பனவு: ஒரு நாளுக்கு ரூ. 2,500.
(நாடாளுமன்ற அமர்வுகள் இல்லாத நாட்களில் நடைபெறும் குழுக்கூட்டங்களுக்கும் இது பொருந்தும்).
கூட்டக் கொடுப்பனவு: ஒரு நாளுக்கு ரூ. 2,500.
எரிபொருள் கொடுப்பனவு ஒவ்வொரு உறுப்பினரும் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு இடைப்பட்ட தூரம் மற்றும் தேசிய பட்டியல் உறுப்பினர்களுக்கு 419.76 லீட்டர் டீசல் என்ற அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதி சந்தையில் நிலவும் டீசல் விலைக்கு ஏற்ப இந்த கொடுப்பனவு வழங்கப்படும்.

