
பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு
களுத்துறை, பாணந்துறை, அலுபோமுல்ல பகுதியில் இன்று காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை, அலுபோமுல்ல பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றின் மீதே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது
துப்பாக்கிச் சூட்டின் போது விற்பனை நிலையத்தில் பெண் ஒருவர் இருந்துள்ள நிலையில் எந்தவித காயங்களும் இன்றி உயிர்தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த துப்பாக்கிசூட்டிற்கு N99 ரக பிஸ்டல் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

