வெளிநாட்டு தொழிலாளர்கள் மீதுஅமெரிக்கா விதிக்கும் கடுமையான சட்டங்கள்

வெளிநாட்டு தொழிலாளர்கள் மீதுஅமெரிக்கா விதிக்கும் கடுமையான சட்டங்கள்

வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவில் பணிபுரியும் தொழிலாளர்கள் மீது கடுமையான சட்ட விதிகள் அமல்படுத்தப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிற்கு வரும் வெளிநாட்டு தொழிலாளர்கள் எந்த தொழித்துறையை சார்ந்தவராக இருப்பினும் அவர்கள் முறையான அனுமதியுடன் தங்கள் நாட்டிற்குள் சட்டப்பூர்வமாக நுழைய வேண்டும் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அபிகெய்ல் ஜாக்சன் தெரிவித்தார்.

அமெரிக்காவின் ஜோர்ஜியாவின் ஒரு ஹூண்டாய் மோட்டார் ஆலையில் நேற்று நடத்தப்பட்ட பாரிய சோதனை நடவடிக்கையின் பின்னர் இந்த கடுமையான விதிகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சட்டவிரோத வேலைவாய்ப்பு மற்றும் குடியேற்றச் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் சுமார் 475 தொழிலாளர்கள் இதன்போது கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் தென் கொரியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஒரே இடத்தில் நடத்தப்பட்ட மிகப்பெரிய பாரிய சோதனை இதுவென
வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )