83 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்த இருவர் கைது!

83 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்த இருவர் கைது!

கணேமுல்ல பொலிஸ் பிரிவின் ஹொரகொல்ல பகுதியில் பல்வேறு நபர்களுக்குச் சொந்தமான 83 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்த ஆண் மற்றும் பெண் சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கணேமுல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு நடத்திய சோதனையைத் தொடர்ந்து குறித்த ச ந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வத்தளை மற்றும் கணேமுல்ல பகுதிகளைச் சேர்ந்த 51 , 62 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கணேமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )