
சஷீந்திர ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்
ஊழல் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, மகாவலி அதிகாரசபையின் காணியில் கட்டப்பட்ட தமது அரசியல் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் அழித்தமைக்கு இழப்பீடாக 88 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை சட்டவிரோதமாக பெற்று ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றத்தை புரிந்தமை தொடர்பில் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
தொடர்ந்து இன்றைய தினம் சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதம நீதவான் அசங்க. எஸ். போதரகம சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்

