
பொரளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது
பொரளை, சஹஸ்புரவில் பகுதியிலுள்ள சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் இருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையின் தேடுதல் நடவடிக்கையில் குறித்த சந்தேகநபர் நேற்று(12) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் மற்றும் உந்துருளி என்பனவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அம்பாறை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் 2015 ஆம் ஆண்டு இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

