
மஹரகம விபஸ்ஸயாராமய விஹாரையின் வருடாந்த பெரஹெர நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பு
மஹரகம ஸ்ரீ விபஸ்ஸயாராமய புராண ராஜமஹா விஹாரையின் வருடாந்த பெரஹெர நிகழ்வு நேற்று (13) மாலை இடம்பெற்றது.

ஸ்ரீ விபஸ்ஸயாராமய ராஜமஹா விஹாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய மககும்புக்வேவ சந்தனந்த மகாநாயக்க தேரரின் கௌரவ அழைப்பின் பேரில் இந்நிகழ்வில் எதிரக்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதில் பங்கேற்றார்.
மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டு, புனித கலசத்தை யானை மீது வைக்கும் நிகழ்வில் பங்கேற்றார்.

அதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த மக்கள் மற்றும் மதப் பிரமுகர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், பெரஹெரா கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தையும், புத்த சாசனத்தைப் பாதுகாப்பதுடன், சக மதங்களையும் பாதுகாத்துக் கொண்டு நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பது தொடர்பிலும் தெளிவூட்டினார்.

