
கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் எதிர்வரும் வியாழக்கிழமை (18) ஒன்பது மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய கொழும்பு 1-15, பத்தரமுல்லை, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்தை, தலவத்துகொட, கோட்டே, இராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொடை, நாவல, கொலன்னாவை, IDH, கொட்டிகாவத்தை, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்தை, முல்லேரியா, மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை, இரத்மலானை மற்றும் மொரட்டுவ ஆகிய பகுதிகளில் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

