
வலென்சியாவை வீழ்த்திய பார்சிலோனா
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், தமது மைதானத்தில் நேற்று (15) நடைபெற்ற வலென்சியாவுடனான போட்டியில் 6-0 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான பார்சிலோனா வென்றது.
பார்சிலோனா சார்பாக, பெர்மின் லொபேஸ், றபீனியா, றொபெர்ட் லெவன்டோஸ்கி ஆகியோர் தலா இரண்டு கோல்களைப் பெற்றனர்.
CATEGORIES Sports News

