
ரயிலில் மோதி முதியவர் ஒருவர் பலி
பொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கத்துருவெல ரயில் நிலையத்துக்கருகில் நேற்று (18) ரயிலில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
70 வயது மதிக்கத்தக்க முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த முதியவரின் உடல் பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
CATEGORIES Sri Lanka

