
ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று
ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு விழா இன்று நடைபெறவுள்ளது.
கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டையில்
உள்ள மோனார்க் இம்பீரியல் ஹோட்டலில் இன்று காலை 9 மணிக்கு இந்த விழா ஆரம்பமாகவுள்ளது.
‘ஒன்றாக நிற்போம், ஜனநாயகத்தைப்பாதுகாப்போம், அனைத்து சக்திகளையும்
ஒன்றிணைப்போம்.’ – என்ற கருப்பொருளில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு விழா இம்முறை இடம்பெறவுள்ளது.
இந்த விழாவில் பங்கேற்பதற்கு எதிரணியில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த விழாவில் எதிர்க்கட்சித்தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ பங்கேற்கமாட்டார் என்று அறியமுடிகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரமற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கட்சி சார்பில் கலந்து கொள்வார்கள் எனத் தெரியவருகின்றது.

