யாழில் துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிப்பு

யாழில் துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிப்பு

யாழ் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆரம்பகட்ட பணியில் பணியின் போது துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிப்பட்டுள்ளதாக ஊர் காவல்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊர் காவல்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டைதீவுப் பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதான ஆரம்பக் கட்ட பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் நேற்று (20) T56 ரக துப்பாக்கி ரவைகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான தகவல்கள் ஊர்காவற்றுறை  பொலிஸாருக்கு வழங்கப்பட்டது.

இவ் விடயம் தொடர்பாக ஊர்காவற்றுறை  பொலிஸார் நீதிமன்றத்தில் இன்று (21) ரவைகளை மீட்டெடுப்பதற்கான மனுவை வழங்க உள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர் காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )