
மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதியதில் இளைஞன் ஒருவர் பலி
உடப்புசல்லாவ – நுவரெலியா பிரதான வீதியில் ஹவேலியா சந்தியில் நேற்று (21) இரவு மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் இன்று (22) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் ஹவேலியா பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஆவார்.
இருப்பினும் சந்தேகத்தின் பேரில் லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

