
வயிற்றில் தங்கத்தை வைத்து கடத்திய பெண் கைது
உடல் பாகத்தினுள் மறைத்து தங்கத்தை கடத்திய பெண் ஒருவரை காங்கேசந்துறை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் நேற்று (21) கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து வந்த விமானத்தின் ஊடாக குறித்த பெண் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை நேற்று (21) வந்தடைந்துள்ளார்.
அதன்போது விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவர் தமது உடற்பாகங்களுக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனை அடுத்து சந்தேகநபரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்து மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதீபன்
CATEGORIES Sri Lanka

