தங்கல்ல வீட்டில் காணப்பட்ட சடலங்கள் மற்றும் 600 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருள் தொடர்பில்  போலீசார் வெளியிட்ட மேலதிக தகவல்

தங்கல்ல வீட்டில் காணப்பட்ட சடலங்கள் மற்றும் 600 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருள் தொடர்பில் போலீசார் வெளியிட்ட மேலதிக தகவல்

தங்காலை, சீனிமோதராவில் புதுப்பிக்கப்பட்டு வந்த வீடொன்றில் மீட்கப்பட்ட இரண்டு ஆண்களின் சடலங்கள் குறித்து போலீசார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர் .

தங்காலை, சீனிமோதராவில் ஒரு பழைய வீட்டை வாங்கிய நபர் ஒருவர், அந்த வீட்டைச் சுற்றி ஒரு மதில் சுவரைக் கட்டி, பல நாட்களாக வீட்டுக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு மூன்று தொழிலாளர்கள் வீட்டைப் புதுப்பிக்க ஒன்றாக வேலை செய்து வந்ததாகவும், அவர்கள் வீட்டில் மது அருந்தியதாகவும் இதன்போது
திடீரென அவர்களில் ஒருவர் சுகயீனமுற்ற நிலையில் , பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சுகயீனமுற்றவரின் வீட்டார்கள் அவரை உடனடியாக அங்கு வந்து தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று காலை உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தங்காலை, விதாரன்தெனியவைச் சேர்ந்த 50 வயதான துசித குமார என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

இந்த மரணம் குறித்து தங்காலை பொலிஸாருக்கு குடும்பத்தினர் முறைப்பாடளித்தனர்.

இதனையடுத்து பொலிஸ் அதிகாரிகள் நேற்று குறித்த கட்டுமானப் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வீட்டிற்கு சென்று விசாரணைகளைத் தொடங்கிய போது அந்த வீட்டின் ஒரு அறையில் மேலும் இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

அம்பலந்தோட்ட நோனகம பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய கவிந்து கல்ஹார, , மற்றும் 24 வயதுடைய தனுக லக்ஷன் ஆகிய இருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்ட்டனர்.

மேலும் இரண்டு உடல்களுக்கும் அருகில் ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும் அந்த வீட்டிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றை சோதனையிட்டபோது அதிலிருந்தது 10 ஐஸ் போதைப்பொருள் பக்கற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன .

இதேவேளை தங்காலையில் நேற்று வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மேலும் இரண்டு லொறிகள் உட்பட மூன்று லொறிகளிலிருந்தும் மொத்தமாக சுமார் 600 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருள்கள் கண்டுபிடிக்கப்ட்டன ,

குறித்த லொறியில் இருந்து 4 நவீன துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )