சோளம் அறுவடை காலத்தில் 3 இலட்சம் மெட்ரிக் டொன் சோளத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் எடுத்த நடவடிக்கையால், உள்நாட்டில் சோளத்தை உற்பத்தி செய்து வரும் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு

சோளம் அறுவடை காலத்தில் 3 இலட்சம் மெட்ரிக் டொன் சோளத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் எடுத்த நடவடிக்கையால், உள்நாட்டில் சோளத்தை உற்பத்தி செய்து வரும் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு

சோளத்திற்கு ரூ.140 உத்தரவாத விலை வழங்கப்பட்ட போதிலும், அரசாங்கம் 3 இலட்சம் மெட்ரிக் டொன் சோளத்தை இறக்குமதி செய்ததால் விலை ரூ.120 முதல் 115 வரை குறைந்து காணப்படுகின்றன.

இதன் விளைவாக, சோளச் சொய்கைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் உதவியற்ற நிலைக்கு மாறியுள்ளமையை அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு அண்மையில் மேற்கொண்ட விஜயத்தின் போது அறிய முடிந்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சோளத்தை பயிரிட்டு அறுவடையைப் பெற்றுக் கொள்ள சுமார் 110 நாட்கள் தேவைப்படுகின்றன. என்றாலும், இந்தச் செயல்பாட்டில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, 80 நாட்கள் 70 நாட்கள் ஆன சோளச் செடிகளோடு ஒரு கிலோ ரூ. 25க்கு விற்கப்பட்டன.

இது விவசாயிகள் என்னிடம் நேரடியாக தெரிவித்த விடயங்களாகும்.

இந்த பயிர்களை எறும்புகள், குரங்குகள் மற்றும் முள்ளம்பன்றிகளில் இருந்து இன்னும் 40 நாட்களுக்குப் பாதுகாப்பதற்குப் பதிலாக, விலை குறைந்துள்ள காலத்திலயே செடிகளோடு விற்றால் கொஞ்சமேனும் இலாபம் ஈட்ட முடியுமை என்பதனால் இவ்வாறு விற்றுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டு உரங்களுக்கு தடை வந்தபோது கூட, 178,000 மெட்ரிக் டொன் சோளமே நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டன. மகாவலி பகுதிகளில் அறுவடையானது சாதாரண பகுதிகளை விட மூன்று மடங்கு அதிகமானதாகும்.

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் சேனா புழு தாக்கப் பிரச்சனையின் போதும். இவ்வளவு தொகை இறக்குமதி செய்யப்படவில்லை. அரசாங்கம் வாக்குறுதியளித்த உத்தரவாத விலையும் பெற்றுக் கொடுக்கப்படவில்லை.

இதன் காரணமாக, விவசாயிகள் 70 நாட்களே ஆன தங்கள் சோளப் பயிர்களை செடியோடு விற்றுள்ளனர். சோளம் அறுவடை காலத்தில் 3 இலட்சம் மெட்ரிக் டொன் சோளத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் எடுத்த இந்த நடவடிக்கையால், உள்நாட்டில் சோளத்தை உற்பத்தி செய்து வரும் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

எனவே, இப்போதாவது இதற்கான முறையான திட்டத்தை வகுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )