
நாடாளுமன்ற வளாக பொதுக் கழிப்பறையை நான்கு மணிக்கு மூடாமல் திறந்து வையுங்கள் !
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பொது மலசல கூடத்தை நான்கு மணிக்கு மூடாமல் திறந்து வைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்றத்தில் நிலையியற் கட்டளையின் கீழ் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமர்வில் நிலையியற் கட்டளையில் குறிப்பிட்டுள்ளதன்படி நாடாளுமன்ற கட்டட முகாமைத்துவத்திற்கு பொறுப்பானவர் சபாநாயகர் என்ற வகையில் தனது கேள்வியை கேட்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பொது மலசல கூடம் உடைக்கப்பட்டு களவாடப்படுவதால் பொது மலசல கூடங்கள் நான்கு மணிக்கு மூடப்படுகிறது.
அதனால் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடும் பொலிஸார் தங்களின் இயற்கை கடமைகளை முடித்துக் கொள்ள அவஸ்தைப்படுவதோடு பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதால் அதை இரவும் திறந்து வைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார் .

