எச்சரிக்கையை மீறி புயலில் செல்ஃபி எடுத்த இலங்கைப் பெண் ஹொங்கொங்கில் கைது

எச்சரிக்கையை மீறி புயலில் செல்ஃபி எடுத்த இலங்கைப் பெண் ஹொங்கொங்கில் கைது

குழந்தையுடன் புயலில் செல்ஃபி எடுக்க முயன்ற இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த இரு பெண்களை ஹொங்கொங் போலீசார் கைது செய்துள்ளனர்,

சீனாவை நோக்கி நகர்ந்தது கொண்டிருக்கு ‘ரகசா’ புயல் ஹொங்கொங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் , பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும் கடலோரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் ஹொங்கொங் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்திருந்தனர்.

புயல் மற்றும் கடல் அலைகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் , இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாய், அவரது குழந்தை மற்றும் இந்திய பெண்ணின் நண்பியான இலங்கைப் பெண் ஒருவரும் புயலின் செல்ஃபி எடுக்க முற்பட்டுள்ளனர்..

மூவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது, ​​எழுந்த பாரிய கடலலை ஒன்று அவர்கள் மூவரையும் இழுத்துச் சென்றது.

விரைந்து செயற்பட்ட மீட்புக் குழுவினர் மூவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், எச்சரிக்கை அறிவிப்பை மீறி , 5 வயது குழந்தையையுடன் புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் இரண்டு பெண்களையும் ஹொங்கொங் போலீசார் கைது செய்துள்ளனர்.

புகைப்படம் எடுத்த தருணத்தையும், பின்னர் அவர்கள் அலையில் அடித்துச் செல்லப்பட்ட விதத்தையும் அருகில் இருந்த ஒருவர் தனது மொபைல் போனில் பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.

பாரிய அளவில் மேலெழுந்த கடல் அலை ஒரே சமயத்தில் மூவரையும் அடித்துச் செல்லும் காட்சி கமராவில் பதிவானது.

இந்த ஆண்டின் மிகவும் ஆபத்தான சூறாவளியாகக் ‘ராகசா’ சூறாவளி கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )