
ராகமையில் 1 கிலோ ஐஸ் மற்றும் 560கிராம் ஹெராயினுடன் பெண்ணொருவர் கைது வீட்டுரிமையாளர் தப்பியோட்டம்
ராகம கண்டேபாலுவ பகுதியில் ஒரு கிலோகிராம் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் எனப்படும் “ஐஸ்” மற்றும் 560 கிராம் ஹெராயின் வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில் அப்பகுதியிலுள்ள வீடொன்று சோதனைக்குட்படுத்தப்பட்ட போது குறித்த வீட்டின் உரிமையாளர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக நம்பப்படும் வீட்டு உரிமையாளர் தப்பிச் செல்லவதற்கு உதவி செய்ததாக கூறப்படும் அயலவர்கள் நால்வர் இதன்போது கைது செய்யப்பட்டனர்..
தப்பியோடியதாக கூறப்படும் வீட்டின் உரிமையாளரை தேடும் பணிகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட பெண் வெலிக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டாதாக தெரிவிக்கப்படுகிறது.

